சத்துமாவு சாப்பிட்டதால் 9 பேர் மருத்துவமனையில் அனுமதி!! விஷமாகும் உணவு!!

 
மருத்துவமனை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் அருகே உள்ள சின்ன பரவத்தூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கே அருந்ததிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார். 40 வயதான இவர்  கூலி தொழில் செய்து வருகிறார். இவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்காக அங்கன்வாடியில் இருந்து சத்து மாவு கொடுக்கப்பட்டுள்ளது.

சத்துமாவு

அக்டோபர் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நேற்று முன்தினம் மதியம் சத்து மாவில் தோசை சுட்டு சாப்பிட்டுள்ளனர். தொடர்ந்து இரவும் அந்த சத்து மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு வழக்கம்போல் தூங்க சென்றனர். இதில் சிவகுமார் உட்பட வீட்டிலிருந்த 6 பேருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 3 குழந்தைகளுக்கும் சத்து மாவு சாப்பிட்டதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடல் சோர்வடைந்த 3 குழந்தைகள் உட்பட 9 பேரும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 1 குழந்தை உட்பட 3 பேர் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 6 பேர் சோளிங்கர் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சத்துமாவு

இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்குமார், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரவீந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் கோபிநாத், சுாதார ஆய்வாளர் சௌந்தரபாண்டியன் ஆகியோர் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது சத்துமாவை நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் வைத்திருந்து தோசை சுட்டு சாப்பிட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து வீட்டில் இருந்து சத்து மாவை ஆய்வுக்காக அதிகாரிகள் கொண்டு சென்றனர். அத்துடன் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்துமாவு சாப்பிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web