அதிர்ச்சி... கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து 9 பேர் பலி!!

 
கால்வாய்

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் ரெதிபோட்கி  கிராமத்தில் வசித்து வரும் மக்கள் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள டிராக்டரில் சென்றனர். ரண்டால் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக டிராக்டரில் பெண்கள், சிறுவர்கள் உட்படசுமார் 50 பேர் இருந்தனர். டிராக்டர் தாஜ்புரா   கிராமத்திற்கு கு அருகே சென்று கொண்டிருந்தபோது,   திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் தறிகெட்டு ஓடிய டிராக்டர் சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விட்டது.  

கால்வாய்

டிராக்டர் கவிழ்ந்த சமயத்தில்  கால்வாயில் நீரோட்டம் வேகமாக இருந்ததால் பலர் அடித்து செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணிகளில்   ஈடுபட்டனர். இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில்  கால்வாயில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் நேற்று காலை கால்வாயில் இருந்து மேலும் 4 உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 9 பேரில் 4 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோர விபத்தில் மேலும் சிலர் மாயமாகி இருப்பதால்  பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.   டிராக்டரில் பயணம் செய்ய முடிவு செய்த போது  கிராம மக்கள் கால்வாய் இருக்கும் பகுதி வழியாக செல்ல வேண்டாம் என டிரைவருக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கால்வாய்

 அதை புறக்கணித்துவிட்டு டிரைவர் அந்த வழியாக சென்றபோது விபத்து நேரிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த உத்தரபிரதேச முதல்வர்   யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றவர்கள் கால்வாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும்  ஏற்படுத்தி உள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web