தளபதி 68 ல் இணையும் 90’ஸ் ஹீரோக்கள்!!

 
தளபதி 68

இளையதளபதி விஜய் சமீபகாலமாக அரசியலுக்கு வருவதற்காக அடுத்தடுத்த நகர்வுகளை மேற்க்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனையடுத்து அவரது ஒவ்வொரு நகர்வும் தலைப்பு செய்தியாகி விடுகின்றன.அவரது லியோ படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் அடுத்தப் படம் வெங்கட்பிரபு இயக்கத்தில் என அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு தளபதி 68 என பெயரிடப்பட்டுள்ளது.  ஏஜிஎஸ் நிறுவனத் தயாரிப்பில்  யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில்   ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

விஜய் யுவன்


 முதல்கட்டமாக இப்படத்திற்காக விஜய்யுடன் அமெரிக்கா சென்ற வெங்கட் பிரபு, அங்கு விஜய்யின் இளம் வயது கதாபாத்திரத்திற்காக அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதற்காக டெஸ்ட் லுக்கை நடத்தி முடித்துள்ளார்.  ஒரு வாரம் தங்கியிருந்து ஓகே பண்ணிய இயக்குநர்  வெங்கட் பிரபு தற்போது சென்னை திரும்பி இருக்கிறார். விரைவில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  . இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். தளபதி 68 படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது.

பிரசாந்த் பிரபு தேவா

நடிகர் ஜெய், பிரியங்கா மோகன், ஜோதிகா , சிம்ரன், சிநேகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் சினேகாவை கமிட் செய்துள்ளதாக கூறப்பட்டது.   தற்போது புதுவரவாக, இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்தும், பிரபுதேவாவும் இணைந்துள்ளனர்.  விஜய் ஏற்கனவே பிரபுதேவா உடன் வில்லு, போக்கிரி படங்களில் பணிபுரிந்தவர். ஆனால் பிரசாந்த் உடன் பணிபுரிய இருப்பது இதுவே முதல்முறை. இருவரும் ஒரு காலத்தில் விஜய்க்கு சமகால போட்டியாளர்கள். தற்போது மூவரும் ஒரே படத்தில் நடிக்க உள்ளனர். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web