90 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி... உண்ணாவிரத போராட்டத்தில் பரபரப்பு!!

 
ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

சமவேலைக்கு சம ஊதியம்  என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் 4 ஆசிரியர் சங்கங்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினரும், பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தினரும், டெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

சென்னையில் நேற்று மாலை முதலே மழை வெளுத்து வாங்கியது. எதையும் பொருட்படுத்தாமல்  ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அடுத்தடுத்து 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டக்களத்தில் மயக்கம் அடைந்து விழுந்தனர்.  அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

4வது நாளான இன்று 90க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  எத்தனை பேர் மயக்கம் அடைந்தாலும், உயிரை இழக்க நேர்ந்தாலும் சரி, கோரிக்கையை நிறைவேற்றும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web