9 ஆண்டுகளாக பஜ்ஜி சுட்ட எண்ணெயில் ஓடும் கார்!!

 
சொகுசு கார்

பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயைக் கொண்டு தனது காரை இயக்கி வருகிறார். அதுவும் எந்த பழுதுமின்றி 1.20 லட்சம் கி.மீட்டர் வரை பயணித்துள்ளது மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதனால் அதன் விலை அதிகரித்து வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதன் விளைவாக மக்கள் மாற்று வழிகளில் தங்கள் வாகனத்தை இயக்க முயன்று வருகிறார்கள். அதற்கான சில கண்டுபிடிப்புகளும் மக்களால் பெரிதும் ஈர்க்கப்படுகிறது.கர்நாடகாவில், பெங்களூருவில் வசித்து வருபவர் அவினாஷ் நாராயணசாமி (வயது 40). இவர் சொந்தமாக ஒரு கார் வைத்துள்ளார். அதனை கடந்த 9 ஆண்டுகளாக சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெயைக் கொண்டு இயக்கி வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

கார்

தனது காருக்காக ஓட்டல்களில் ஓட்டல்களில் போண்டா, பஜ்ஜி சுடுவதற்கு பயன்படுத்தடும் மீதி எண்ணெயை குறைந்த விலைக்கு வாங்கி வருகிறார். அதைத்தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் அதனை சுத்திகரித்து, தனது வண்டிக்கு எரிபொருளாக பயன்படுத்துகிறார். கடந்த 2013ம் ஆண்டு  முதல் அவினாஷ் நாராயணசாமி தன் காருக்கு இந்த எண்ணெயை தான் எரிபொருளாக பயன்டுத்தி வருகிறார்.

இப்படி ஓட்டல்களில் இருந்து பெறப்படும் 1 லிட்டர் எண்ணெயில் இருந்து சுமார் 700 முதல் 800 மி.லிட்டர் வரையிலான எரிபொருள் அவருக்கு கிடைக்கிறது. மேலும் 1 லிட்டருக்கு 15 முதல் 17 கி.மீட்டர் வரை மைலேஜ் கிடைக்கிறது என்கிறார் அவினாஷ். இதற்காக ரூ.60 முதல் ரூ.65 வரை மட்டுமே செலவாகிறது.  இந்த எரிபொருளைக் கொண்டு இதுவரை 1.20 லட்சம் கி.மீ., வரை கார் பயணித்துள்ளது. இருப்பினும் காரின் இன்ஜினுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தான் ஆச்சரியத்தின் உச்சம். பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் எரிபொருளை வைத்து டீசல் வாகனங்களை இயக்க முடியும். இதிலிருந்து வரும் புகை மற்ற வாகனங்களுடன் ஒப்பிடுகையில்,  குறைவாக இருக்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத 'பயோ' எரிபொருள் என்ற சான்றிதழையும் பெற்றுள்ளது.

இது மட்டுமல்லாமல், இது தவிர சமையல் எண்ணெயில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் போது, வீணாகும் கழிவுகளையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவற்றில இருந்து  இருந்து கை கழுவும், வீட்டை சுத்தம் செய்யும் கிருமி நாசினியையும் தயாரித்து அசத்தி வருகிறார். இது போன்ற அரிய யற்சிகளை கவுரவித்து ‘இண்டியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனை புத்தகத்திலும் அவினாஷ் நாராயணசாமி இடம் பெற்றுள்ளார்.பெட்ரோல், டீசல் மாற்று பொருளுக்கான வரவேற்பு எப்போதும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதன்படி பயோ எரிபொருள் மூலமாக கடந்த 9 ஆண்டுகளாக தனது காரை இயக்கி வரும் அவினாஷ் நாராயணசாமிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web