நகைக்கடன் தள்ளுபடி பெறாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு சங்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். அதன்படி திமுக ஆட்சியை பிடித்த நிலையில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார்.
அதனைதொடர்ந்து, நகைக்கடன் விவரங்களை ஆய்வு செய்த போது, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதில் குளறுபடிகள், முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல் வெளியானது. எனவே இதுகுறித்து ஆய்வு செய்து தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
அதன்படி, கடந்த நவம்பர் மாதம் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வைக்கப்பட்டுள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து. அதனைதொடரந்து நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக தகுதியானவர்களின் பட்டியலை தயாரிக்கும் பணிக்கு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை அடிப்படையாக வைத்து, நகை கடன் தள்ளுபடி பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி சுமார் 13 லட்சம் பயனாளிகளுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுடையவர்கள் என்றும் 35 லட்சம் பேர் நகைக்கடன் பெற தகுதியற்றோர் என்று தெரியவந்தது. இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறாதோர் தங்களின் ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நகைக்கடன் வழங்கும் கூட்டுறவு நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் ஆணையின்படி பொது நகை கடன் தள்ளுபடி திட்டம் 2021-ன் கீழ் நகைக் கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகள் பட்டியல் https://virudhunagar.nic.in என்ற வலை தளத்திலும், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வலைதளமான www.vrdccbank.in-லும் 8.4.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின்படி தள்ளுபடிக்கு தகுதியான பட்டியல் வலைதளத்தில் வெளியிடப்பட்ட 8.4.2022 முதல் 7.5.2022 வரை ஒருமாத காலத்தில் தள்ளுபடிக்கு தகுதி பெறாதோர் தங்களது ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை தொடர்புடைய கூட்டுறவுச் சங்கங்களுக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணைப்பதிவாளர் அலுவலகங்களில் மனுக்களை அளிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
