நிர்வாண போட்டோஷூட் நடத்திய பிரபல நடிகர்!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
ரன்வீர் சிங்

பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் நிர்வாணமாக போட்டோ ஷ¨ட் நடத்தி அதற்கான புகைப்படங்களை சமூக வலைளதங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த படங்கள் வைரலாகி வருகிறது.நடிகர் ரன்வீர்சிங் பாலிவுட்டின் அசைக்க முடியாத நட்சத்திரங்களில் ஒருவராக எப்போதும் பிசியாக நடித்துக் கொண்டு இருப்பவர். திரைப்படம் மட்டுமல்லாது விளம்பரப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இந்தியானா பல்கலை கழகத்தில் பட்டம் பெற்ற ரன்வீர்சிங்கின் திரையுலகக் காதல் சிறு வயது முதலே மேடை நாடகம், பள்ளி விழாக்கள் உள்ளிட்டவற்றில் இருந்து ஆரம்பித்துள்ளது.

அதன் பின்னர் சினிமா மீது தனது பார்வையை திருப்பினார். கடந்த 2010ம் ஆண்டு வெளியான ‘பேண்ட் சர்மா பாராத்’ என்ற படத்தில் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் ஜோடி போட்டு நடித்து முதன் முதலாக அறிமுகமானார். பெரிய அளவு ஹிட் கொடுத்த இந்த படத்தின் மூலம் இந்தி திரையுலகின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக விஸ்வரூபம் எடுத்தார். தனது அறிமுகப் படத்திலேயே ரன்வீர்சிங்குக்கு அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது. ரன்வீர் சிங்& நடிகை தீபிகா படுகோன் காதல் கடந்த 2018ம் ஆண்டு திருமணத்தில் கைகூடியது. 


வித்தியாசமான உடை அமைப்பை விரும்பும் ரன்வீர் சிங் அதற்கு ஏற்ற மாதிரி சிகை அலங்காரத்திலும் அக்கறை செலுத்துபவர். இவரை பின் தொடரும் இளைஞர் பட்டாளம் ஏராளம்.பாலிவுட்டின் ஸ்டைல் ஐகானாக வலம் வரும் ரன்வீர் இந்த முறை நிர்வாண மற்றும் அரை நிர்வாணமாக எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து அவற்றை வைரலாக்கி உள்ளார்.

ஹாலிவுட் நடிகர் ஹங்க் பர்ட் ரெனால்ட்சுக்கு அர்ப்பணிக்கும் வகையில் ரன்வீர் சிங் பிரபல தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு தான் எடுத்துக் கொண்ட நிர்வாண போட்டோ ஷ¨ட் புகைப்பட போஸை கொடுத்துள்ளார். ஹாலிவுட் நடிகர் ஹங்க் பர்ட் ரெனால்ட்ஸ் ஏற்கனவே கொடுத்திருந்த புகைப்படத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு அதே போன்ற போஸ் கொடுத்துள்ளார். ரன்வீர்சிங்கின் இந்த முயற்சி பாராட்டை பெற்றாலும், மற்றொரு புறம் இவரின் இந்த செயலுக்கு எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

ரன்வீர்சிங்

இதுகுறித்து நடிகர் ரன்வீர் சிங் பேசும்போது, ‘‘நான் உடல் ரீதியாக நிர்வாணமாக இருப்பது மிகவும் எளிதானது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக நான் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளேன். நீங்கள் முதலில் பார்க்க வேண்டியது என் ஆன்மாவைத்தான். அது எவ்வளவு நிர்வாணமாக இருக்கிறது என்று? ஆம், நிச்சயமாக என் உடலோடு என் ஆன்மாவும் நிர்வாணமாகதான் இருக்கிறது. ஆயிரம் பேருக்கு முன்னால் என்னால் தைரியமாக நிர்வாணமாக இருக்க முடியும். ஆனால், அந்த ஆயிரம் பேரும் என் முன்னால் அசௌகரியமாக உணர்வார்கள்’’ என்று தெரிவித்தார்.


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ரன்வீர்சிங்கின் நிர்வாண புகைப்படத்தை அவரது மனைவியும், நடிகையுமான தீபிகா படுகோனே எவ்வாறு எடுத்துக் கொண்டார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. பாலிவுட் திரையுலகின் பிரபல நட்சத்திரமான ரன்வீர்சிங் குறித்து சக நட்சத்திரங்கள் பல்வேறு கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web