நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி வெட்டிக் கொலை!!

 
ரௌடி

பிரபல ரவுடியின் வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ரவுடி படுகொலை செய்யப்பட்டதுடன் அவரது 2 நண்பர்களுக்கு படுகாயமடைந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தில் வசித்து வந்தவர் பன்னீர்செல்வம் (24). பிரபல ரவுடியாக வலம் வந்த பன்னீர்செல்வத்தின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

கொலை
இந்நிலையில் ரவுடி பன்னீர்செல்வம் தனது வீட்டில் இரவு 10 மணியளவில் அவரது நண்பர்களான சக்தி (20), பாலாஜி ஆகியோருடன் மது அருந்தியபடி பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த மர்ம கும்பல், 3 பேர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது. இதில் நிலை குலைந்து போனவர்கள் சுதாரிப்பதற்குள் பன்னீர்செல்வம் மற்றும் உடனிருந்த 2 நண்பர்களையும் அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. படுகாயமடைந்த பன்னீர்செல்வம் மற்றும் நண்பர்கள் 2 பேரும் வலி தாங்க முடியாமல் கதறி துடித்த சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் பதறிப்போய் உடனடியாக விரைந்து வந்து கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் பன்னீர்செல்வம் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரி  புதுவை
நண்பர்களான சக்தி, பாலாஜி ஆகிய 2 பேரும் தற்போது கதிர்காமம் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.இந்த பயங்கர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக வெடிகுண்டு வீசியும், அரிவாளால் தாக்கியும் ரவுடி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிகிறது. மேலும் சிகிச்சை பெற்று வரும் 2 நண்பர்களையும் விசாரிக்கும் போது மேற்கொண்ட பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இரவு 10 மணியளவில் வீடு புகுந்து நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web