கல்லூரி மாணவியின் தந்தை மரணத்தில் திடீர் திருப்பம்! பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி!

 
சத்யா

கல்லூரி மாணவி சத்யாவின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரது பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுவில் விஷம் கலந்து  குடித்துள்ளதால் மரணம் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மாணிக்கம் (47). இவரது மனைவி ராமலட்சுமி (43). மாணிக்கம் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு சத்தியப்பிரியா (20) என்ற மகள் உள்ளார். இவர் தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் மதியம் பரங்கிமலை ரயில்நிலையத்துக்கு வந்து அங்கிருந்து மின்சார ரயில் மூலம் கல்லூரிக்கு செல்வது வழக்கம். 

சத்தியப்பிரியா வசித்து வரும் போலீஸ் குடியிருப்புக்கு எதிரே உள்ள வீட்டில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சதீஷ் (23). டிப்ளமோ படித்துள்ளார். சத்தியப்பிரியா, சதீஷ் ஆகியோரின் வீடு எதிரெதிரே என்பதாலும், இருவரும் போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் இருவரது வீட்டுக்கும் தெரிய வந்தது. 

சத்யா சதீஷ்

இவர்களது காதலுக்கு சத்தியப்பிரியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை புரிந்துகொண்ட சத்தியப்பிரியா, சதீஷை விட்டு விலக தொடங்கினார். இந்த நி்லையில் வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று மதியம் 1.30 மணிக்கு தனது தோழியுடன் சத்தியப்பிரியா, பரங்கிமலை ரயில் நிலையம் வந்தார். அவர் ரயிலுக்காக காந்திருந்தபோது, அங்கு வந்த சதீஷ், சத்தியப்பிரியாவிடம் பேச முயன்றார். ஆனால், அவர் பேசுவதை தவிர்த்து வந்தார். 

அப்போது இருவருக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே தகராறு உச்சகட்டத்தில் இருந்த போது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் நடைமேடை பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சதீஷ், சத்தியப்பிரியாவை ஓடும் ரயில் முன்பு தள்ளினார். அப்போது ரயிலின் முன்பகுதியில் மோதியபடி சத்தியபிரியா தண்டவாளத்தில் விழுந்த சத்தியப்பிரியா மீது ஏறி இறங்கியது. ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சத்தியப்பிரியா உயிரிழந்தார். சத்தியப்பிரியாவை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த சதீஷ், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். 

அங்கிருந்து தப்பி சென்ற சதீஷை 7 தனிப்படைகள் அமைத்து அதிகாரிகள் தேடி வந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் அவன் கைது செய்யப்பட்டான். இதற்கிடையில், நள்ளிரவு நேரத்தில் மாணவியின் தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

சத்யா

இந்நிலையில், மாணவியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விசாரணையில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. மகளின் இறப்பு செய்தியை கேட்டு துயரமடைந்த சத்யாவின் தந்தை மாணிக்கம், மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். 

விஷம் குடித்த பின்னர் அவரின் நெஞ்சு கடுமையாக எரிச்சலடைந்ததால், மாரடைப்பு வந்ததைப் போல துடிதுடித்த நிலையில், குடும்பத்தினர் மாரடைப்பு என எண்ணி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து இருக்கிறார். மருத்துவர்களின் பிரேத பரிசோதனையில் மாணிக்கம் விஷம் குடித்தது தெரிய வந்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web