ஆன்லைனில் அதிமுக செயற்குழு கூட்டம் ?! பரபரக்கும் அரசியல் களம்!!

 
இன்று அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- முழு விபரம்..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய அதிமுக செயற்குழு,  பொதுக்குழு கூட்டம் ஏற்கனவே சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் தீர்வு எட்டப்பட முடியாததால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட உள்ளது.

அதிமுக

அதன்படி அடுத்த பொதுக்குழுக் கூட்டம்  ஜூலை 11 ம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இதனிடையே,தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   

அதிமுக

பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்துவது குறித்து ஒரு மாற்று திட்டத்தை அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் பரிசீலித்து வருகின்றனர். இது குறித்து அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிமுக செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பின் காரணமாக பொதுக்குழுவுக்கு தமிழக அரசு அனுமதிவில்லை. இதன் அடிப்படையில் இத்தகைய மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web