அசத்தல்!! ஒரே பக்கத்தில் 1330 திருக்குறள்!! கல்லூரி மாணவி சாதனை!!

 
கஜலட்சுமி

பள்ளி மாணவர்களிடையே படிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கொரோனா காலத்திற்கு முன்பு வரை மொபைல் , லேப்டாப், டிவி இவைகளை குழந்தைகள் பயன்படுத்த ஓரளவு கட்டுப்பாடுகள் பெரும்பாலான வீடுகளில் இருந்தன. ஆனால் அதன் பிறகு ஆன்லைன் வகுப்புக்கள் காரணமாக 2 வயது குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஒரு மொபைல் என்றாகி விட்டது.

திருக்குறள்

அனைவரது பொழுதுபோக்கும் மொபைல், டிவி, லேப்டாப் என்றாகிவிட்டது. கதைப் புத்தகம் வாசிப்பவர்கள் குறைவு. அதிலும் கடந்த 2 வருடங்களில் மிகவும் குறைவு. அடுத்த தலைமுறை பிள்ளைகளிடையே வாசிக்கும் பழக்கத்தை மீண்டும் கொண்டுவர பல்வேறு திட்டங்களும், செயல்பாடுகளும், பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.  அதிலும் சரித்திர புகழ்மிக்க திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களைப் படித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் என்பது மிகவும் அரிதாகி விட்ட காலம். 

திருக்குறள்

தமிழ் மொழியை படிக்கும் ஆர்வம் அதிகரிக்க வேண்டும் என்று பலர் பல சாதனைகளை புரிந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில், கஜலட்சுமி என்ற கல்லூரி மாணவி ஒரே காகிதத்தில் 1,330 திருக்குறளையும் 12 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார். இதனை வெறும் கண்களால் பார்க்க முடியாத நிலையில், லென்ஸ் கொண்டே படிக்க முடிகிறது. புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவி கஜலட்சுமி இந்த மகத்தான சாதனையை புரிந்தார்.

இதன் மூலம் இவரது சாதனை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து, உலக சாதனை சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவியின் சாதனையை அவரது குடும்பத்தினர், கல்லூரி நிர்வாகம், நண்பர்கள் என பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web