அசத்தல்!! கடல் சாகச விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனை!!

 
மாணவர்கள்

தூத்துக்குடி கடலில் நடத்தப்பட்ட கிட்டேபோர்டிங் கடல் சாகச விளையாட்டுப் போட்டியில் மும்பை, கோவா, தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி வீரர்கள் வெற்றி பெற்று பதக்கத்தை தட்டிச் சென்றனர். இது கடல் சாகச விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.  2024ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிட்டேபோர்டிங் என்ற கடல் விளையாட்டு சாகச போட்டி புதிதாக சேர்க்கப்படவுள்ளது. எனவே இந்த விளையாட்டை இந்திய அளவில் பிரபலப்படுத்துவதற்காகவும் இந்திய இளைஞர்கள் மத்தியில் கிட்டேபோர்ங் விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

கடல்

அதன்படி மாவட்டத்தில் அதிக அளவு காற்று வீசக்கூடிய இடமான வேப்பலோடை கடல் பகுதி தேர்வு செய்யப்பட்டது. அங்கு தேசிய அளவிலான கிட்டேபோர்டிங் என்ற புதிய போட்டி நடத்தி முடிக்கப்பட்டது. இந்த போட்டியில் கர்நாடகா, கோவா, மும்பை, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் என மொத்தம் 15 பேர் கலந்து கொண்டனர். இது தூத்துக்குடியில் நடத்தப்படும் முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கிட்டேபோர்டிங் விளையாட்டு என்பது, கடற்கரையில் இருந்து குறிப்பிட்ட தூரம் காற்றோட்டத்திற்கு ஏற்றபடி பாராசூட் போன்ற காத்தாடியை செலுத்தி கடலில் இலக்கை நோக்கி பயணிப்பதாகும். மொத்தம் 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 12 போட்டிகள் நடைபெற்றது. இறுதியில் கிரேட் அடிப்படையில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாநிலங்கள் அறிவிக்கப்பட்டன.

சாதனை

அதன்படி ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை மும்பயை சேர்ந்த டைலனும்,  2வது இடத்தை தூத்துக்குடியை சேர்ந்த அர்ஜூன் மோத்தா என்ற வீரரும் தட்டிச்சென்றனர். பெண்கள் பிரிவில் முதல் இடத்தை கோவாவை சேர்ந்த காட்டியாஷைனி என் வீராங்கனையும், 2வது இடத்தை கோவாவை சேர்ந்த கெனோ ராஜாநி என்ற வீராங்கனையும் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெறுவார்கள். மேலும் அதைத் தொடர்ந்து 2024ம் ஆண்டு நடைபெற உள்ள  ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிட்டேபோர்டிங் என்ற கடல் விளையாட்டு சாகச போட்டியில் பங்கேற்ற அனைத்து மாநில வீரர், வீராங்கனைகளும் உற்சாகமடைந்துள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web