அதிரடி சரவெடி!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு தீபாவளி போனஸ்!!

 
ரேஷன்

இந்தியா முழுவதும் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இப்போதிருந்தே புத்தாடை, பட்டாசு என  தீபாவளி ஷாப்பிங் களைகட்டத் தொடங்கியுள்ளது. தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில் புதுச்சேரி மாநில அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. அதன்படி , 10 கி அரிசி மற்றும் 2 கி சர்க்கரைக்கான பணம் அவரவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார்.   

ரேஷன்


புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி பகுதியில் சிறப்பு அங்காடியை திறந்துவைத்து பேசிய முதல்வர் ரங்கசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் அந்த சிறப்பு அங்காடியில் 25 மளிகை பொருட்கள் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுத்தர மற்றும் ஏழை மக்களின்  தேவையை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரேஷன் விரல் பதிவு கைரேகை

பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கான பணம் அவரவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் எனவும்  அறிவித்துள்ளார்."பாப்ஸ்கோ நிறுவனம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு இந்த  சிறப்பு அங்காடிகள் திறக்கப்படும் இதன் மூலம்  மளிகை பொருட்கள் மற்றும் பட்டாசுகள் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.  கடந்த ஆண்டு சுமார் ரூ.11 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாப்ஸ்கோ, கான்பெட் நிறுவனங்கள் மூலம் பல இடங்களில் சிறப்பு அங்காடிகள் திறக்கப்பட்டிருப்பதால் மக்களுக்கு எளிமையாக பொருட்கள் கிடைப்பதுடன், விலையேற்றமும் கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web