நீதிமன்றத்தில் ஆஜரானார் நடிகர் சந்தானம்!

 
சந்தானம்

நடிகர் சந்தானம் பூந்தமல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். கட்டிட காண்டிராக்டரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்காக  நேற்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார் நடிகர் சந்தானம்.

நடிகர் சந்தானம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காமெடியனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ‘தில்லுக்கு துட்டு’, ‘ஏ1’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்ததன் மூலம் தமிழக திரையுலகில் கதாநாயகனாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். 

நடிகர் சந்தானம் தனக்கு சொந்தமான இடத்தில் ஒரு பெரிய கட்டிடம் கட்டுவதற்காக சண்முகசுந்தரம் என்ற காண்டிராக்டரை அணுகினார். மேலும் அவரிடம் பெரிய தொகையை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் சில காரணங்களால் பணி நின்று போனது. 

முதல்ல வரியை குறைங்க!! சந்தானம் முதல்வரிடம்  நேரில் வலியுறுத்தல்!!

இதனால் நடிகர் சந்தானம் தான் கொடுத்த பணத்தை காண்டிராக்டர் சண்முகசுந்தரத்திடம் இருந்து திருப்பிக் கேட்டார். இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு காண்டிராக்டர் அலுவலகத்திற்கு சென்ற சந்தானம் மற்றும் அவரது மானேஜர் சண்முகசுந்தரத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இதில் சண்முக சுந்தரம் மற்றும் நடிகர் சந்தானம் ஆகிய 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

சந்தானம்
சந்தானம், காண்டிராக்டர் சண்முகசுந்தரம் ஆகிய இருதரப்பினரும் வளசரவாக்கம் காவல்  நிலையம் சென்று புகார் அளித்தரர். இது குறித்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நடிகர் சந்தானம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வழக்கு விசாரணைக்காக பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் நேற்று மீண்டும் ஆஜராகினார். இந்த வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட் ஆகஸ்டு மாதம் 4ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நடிகர் சந்தானம் தனது காரில் புறப்பட்டு சென்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை