MBA, MCA படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவக்கம்!! எப்படி, எங்கு விண்ணப்பிப்பது? முழு விபரம்!!

 
யுபிஎஸ்சி தேர்வு விடுமுறை மாணவர்கள் கல்லூரி

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் தற்போது இளங்கலை, டிப்ளமோ, மற்றும் எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப செயல்முறையை தொடங்கியுள்ளது. இதில் ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் வருகிற ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை https://ignouadmission.samarth.edu.in  என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கற்றல் (ODL) ஆன்லைன் நிகழ்ச்சிகள் (OL) மூலம் பாடத்திட்டங்கள் வழங்கப்படும் என்று இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவிகள்
எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு கல்விக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் ஒரு விண்ணப்பதாரர் கட்டண விலக்கு வேண்டி பல்வேறு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவரது அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் சேர்க்கை நடைபெற்று முடிந்த பிறகு உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் https://scholarships.gov.in/  என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இந்திய அரசின் உதவித்தொகையை பெறலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவிகள்

விண்ணப்பதாரர்கள் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தின் போது, கல்வித் தகுதி சான்றிதழ், வயதுக்கான சான்றிதழ், பணி அனுபவ சான்றிதழ் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அதனையும் இணைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சாதி தான்றிதழ், வறுமை கோட்டு சான்றிதழ், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், கையெழுத்து நகல் உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்ற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web