2 ஆண்டுகளுக்கு பிறகு ஆனி திருமஞ்சனத் தேரோட்டம்!!

 
நடராஜர்

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் விழாக்கள் அனைத்துமே மிகச் சிறப்பு வாய்ந்தவை. குறிப்பாக மார்கழியில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். கோவில் திருவிழாக்களிலேயே மூலவரே வீதி உலா வருவது சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மட்டும் தான். அந்த வகையில் இன்று  ஆனி திருமஞ்சனம் ஸ்ரீநடராஜருக்கு உரிய அற்புதமான நாள். உலகம் எல்லாம் செழிப்பாக நல்ல மழை வேண்டி இந்த திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

சிதம்பரம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ளவும் அனுமதியில்லை. வீதி உலாவும் நடத்தப்படவில்லை. இதனையடுத்து தற்போது நடராஜர் ஆலயத்தில் நிகழும் ஆனி திருமஞ்சனம் நிகழ்வையும் தேரோட்டத்தையும் காண பக்தி பரவசத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர்.  ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் தேவர்கள், ஆடலரசனுக்குப் பூஜைகள் செய்விப்பதாக  சாஸ்திரங்கள் கூறுகின்றன.  அந்த நன்னாளே ஆனித் திருமஞ்சனத் திருவிழா! பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தைப் போலவே ஆனியில் வரும் உத்திர நட்சத்திரமும் விசேஷம். இந்த ஆனி உத்திரமே, ஆடல்வல்லானுக்கான திருவிழாவாக  கொண்டாடப்படுகிறது.

சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன விழா, பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசியில் அக்கினி நட்சத்திர காலம் முடிவடைந்து  வெப்பத்தில் தகிக்கும் திருமேனிக்கு, ஆனியில் திருமஞ்சனம் செய்யப்படுவதாக ஐதிகம்.  ஆனியில் நடைபெறும் திருமஞ்சனத் திருவிழாவைத் துவக்கி வைத்தவர் பதஞ்சலி மகரிஷி. சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என 5 தொழிலையும் நமக்கு உணர்த்துகிறது. சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளது. இதேபோல், திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம் கொண்டது. இந்த 2 பேரின் நடனத்தையும் பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும் தரிசிப்பதாக ஐதீகம். ஆனி திருமஞ்சன தேரோட்டம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் வலம் வந்தனர்.

தேர்

பக்தர்களின் ஆடலரசா  கோஷம் விண்ணைப் பிளந்தது. திருமஞ்சன விழா நாளை புதன்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனி திருமஞ்சன தரிசனத்திற்காக  ஸ்ரீநடராஜரும் அன்னை ஸ்ரீசிவகாமியும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வர். இருவரும் ஆனந்த நடனம் புரியும் அற்புத காட்சியை பக்தர்கள் கண்குளிர தரிசிக்கலாம்.  ஆனந்த நடனம் ஆடியபடியே, சித்சபையில் எழுந்தருள்வர் ர்கள். இதைக் காணக் கண்கோடி வேண்டும். ஆனித்திருமஞ்சனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலி யோகமும், தம்பதிகளுக்கு சுகமான வாழ்வும் கிட்டும். அத்துடன் ஆயுள், ஆரோக்கியம், மனபலம், திருமண யோகம், குழந்தைப்பேறு, கல்வி , பதவி உயர்வு என நினைத்த காரியம் யாவும் நிறைவேறும் என்பது ஐதிகம். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web