இன்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவு!! அப்பாடா...!!

 
வெயில்

தமிழகத்தில் கோடை வெயில் நடப்பாண்டில் மார்ச் மாதத்திலேயே கொளுத்த தொடங்கி விட்டது. ஒவ்வொரு வருடமும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது அக்னி நட்சத்திரம் தொடங்குவதும் வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டில் அக்னி நட்சத்திரம்    மே 4ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரம் 25 நாட்கள் வரை நீடிக்கும் நடப்பாண்டில் கோடை. வெயிலின் தாக்கம் முன்கூட்டியே  மிகமிக அதிகமாக இருந்தததால்  பள்ளிகளுக்கு  கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

வெயில்

அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதே நேரத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய ஒரு வாரத்திலேயே சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வந்தது.குறிப்பிட்ட  சில இடங்களில் கனமழையும் பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்து வந்தது. அசானி புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் இவைகளால்   தமிழகத்தின் பல பகுதிகளில் அக்னி நட்சத்திர கால கட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தபடியே காணப்பட்டது. இதனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் போது சுமார் 2 வார காலத்திற்கு மேலாக வெயில் தணிவாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

உஷார்! அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் இந்த 13 மாவட்டங்களில் வெயில் கொளுத்துமாம்!
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது . இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் போது அதிகபட்சமாக மே 23ம் தேதி மீனம்பாக்கத்தில் 104 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. 
மே24ம்  தேதி சென்னை, மீனம்பாக்கம், கடலூர், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில்  பதிவானது.  மே 24ம் தேதி தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது.நுங்கம்பாக்கம், தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலூரில் தலா 102 டிகிரியும், ஈரோடு, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல்லில் தலா 100 டிகிரியும் வெயில் பதிவானது.நாளையுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web