தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! இன்றே குவிந்த ‘குடி’மகன்கள்!

 
டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

நாளை மிலாடி நபியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, இன்றே குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்து, ஸ்டாக் வாங்கி வைக்கத் தொடங்கினர். தமிழகம் முழுவதும் அரசு சார்பில் டாஸ்மாக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

டாஸ்மாக்

காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற முக்கிய நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அத்துடன் உள்ளூர் பண்டிகைகள்,  திருவிழாக்கள், போராட்டங்கள் நடைபெறும் நாட்களிலும் மாவட்ட அளவில் விடுமுறை அளிக்கப்படுவதுண்டு. 

டாஸ்மாக் விடுமுறை
அந்த வகையில் நாளை இந்தியா முழுவதும்  அக்டோபர் 9ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடை மற்றும் பார்களை மூட வேண்டும் என மாவட்ட மேலாளர்களுக்கு, டாஸ்மாக் நிர்வாகம்  உத்தரவிட்டுள்ளது. இத்துடன்  ஓட்டல், கிளப்கள், பார்களிலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், குடிமகன்கள் இன்றே டாஸ்மாக் கடைகளில் குவிந்து, அதிகளவில் வாங்கி ஸ்டாக் வைக்கத் துவங்கியுள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web