குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!! குவியத் தொடங்கிய சுற்றுலாப் பயணிகள்!!

 
குற்றாலம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகளின் நகரமான குற்றாலம், தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். பொதுவாக வடகிழக்குப் பருவமழையைப் பெய்வதைப் பொறுத்து டிசம்பர் இறுதிவரை குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து இருக்கும். அதன்பின் அருவிகள் நீரின்றி வறண்டுவிடும். அதற்குப்பின், ஜூன் மாதத்தில்தான் மீண்டும் சீசன் துவங்கும். 

குற்றாலம்

ஆனால் இதுவரை சீசன் தொடங்கவில்லை. இருப்பினும் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் குற்றாலத்திற்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வந்தனர். 

இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் ஐந்தருவி, மெயின் அருவி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சீசன் தொடங்காத நிலையில் முதல்முறை அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கல், மண், மரப்பட்டைகள் அடித்து வரப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 

மணிமுத்தாறு அருவி

குற்றால அருவிகளில் நீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் 2வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.இங்குள்ள அருவிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து பாய்ந்து வந்து ஆர்ப்பரித்து கொட்டுகின்றன. குற்றாலத்தில் மட்டும் பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி, பாலருவி, புலியருவி, பழத்தோட்ட அருவி, செண்பகா தேவி அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி என ஒன்பது அருவிகள் இருக்கின்றன. வழக்கமாக ஜூலை மாதத்தில் குற்றால சீசன் தொடங்கும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web