அசத்தல் சாதனை!! உலக செஸ் போட்டிக்கு தேர்வான 7 வயது தமிழக சிறுமி!!

 
ஷாவார்னிகா

சர்வதேச செஸ் போட்டிகள் அகமகதாபாத் நடைபெற்று முடிந்துள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகள் கலந்து கொண்ட  அளவில் நடத்தப்பட உள்ள செஸ் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து 7 வயது சிறுமி ஷார்வானிகா தேர்வு  செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளதால் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறார். அக்டோபர்  6ம் தேதி 7 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான செஸ் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று நேற்று முன்தினம் முடிவடைந்துள்ளது.

ஷாவார்னிகா

இதில் கலந்து கொள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினார்கள். அதன்படி தமிழகத்தில் இருந்து அரியலூர் மாவட்டம் உடையார்பாளத்தை சேர்ந்த ஷர்வானிகா என்ற 7 வயது சிறுமி கலந்து கொண்டார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி ஷர்வானிகா தான் விளையாடிய 11 சுற்றுகளிலும் தொடர் வெற்றியை பதிவு செய்து தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

செஸ்

இந்த வெற்றி மூலம் ஆசிய அளவிலான செஸ் போட்டி மற்றும் காமன்வெல்த் செஸ் போட்டி மற்றும் உலக செஸ் போட்டிகளில் விளையாட ஷர்வானிகா தகுதி பெற்றுள்ளார். அவரது  இமாலய சாதனைக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web