ஒரு வயது குழந்தையை சுட்டுக்கொன்ற 8 வயது சிறுவன்!! தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்!!

 
துப்பாக்கி

அமெரிக்காவில் ஓட்டல் ஒன்றில் 8 வயது சிறுவன் 1 வயது குழந்தையை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் விடுமுறையை கொண்டாட டிவைன் ராண்டல் என்பவர் தனது 8 வயது மகனுடன் அந்த பகுதியில் இயங்கி வரும் ஒரு ஓட்டலுக்கு வந்துள்ளார். டிவைன் ராண்டலின் தோழியும், அவரது குழந்தைகளுடன் வந்துள்ளார். ஓட்டல் அறையில் இவர்கள் அறை எடுத்து தங்கி இருந்தனர்.இந்நிலையில் ராண்டலும், அவரது தோழியும் தங்கள் இருவரது குழந்தைகளை அறையில் தனியாக விட்டுவிட்டு வெளியில் சென்றுள்ளனர். அப்போது ராண்டலின் மகன், அவரது தந்தையின் பொருட்களை கலைத்து போட்டு விளையாடிய போது, அவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி கி கிடைத்துள்ளது.

குழந்தை

அதை வைத்து ராண்டலின் மகன் விளையாடி இருக்கிறான். எதிர்பார்க்காத நேரத்தில் துப்பாக்கி வெடித்துள்ளது. இதில் அங்கு படுத்துக் கொண்டிருந்த தோழியின் 1 வயது மகன் மீது குண்டு தவறுதலாக பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 1 வயது குழந்தை துடிதுடித்து உயிரிழந்தது. மேலும் இன்னொரு குண்டு அங்கு படுத்துக் கொண்டிருந்த 2 வயது குழந்தை மீதும் பாய்ந்துள்ளது. துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பக்கத்துறை அறையினர் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

துப்பாக்கி

பின்னர் தகவல் அறிந்த போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து ராண்டலிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் தங்கியிருந்த அறையில் போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ராண்டல் கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கிச்சுடு சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர மக்கள் கைத்துப்பாக்கி வைத்திருக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. இருப்பினும் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்தேறிவிடுவது துரதிருஷ்டவசமானது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web