அன்று அரியலூர் அனிதா! இன்று நிஷாந்தினி! நீட் தேர்வுக்கு பயந்து +2 மாணவி தற்கொலை!

 
நீட் தேர்வு

2017ம் ஆண்டு, நீட் தேர்வு காரணமாக அரியலூர் மாவட்டத்தில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களும் வலுப்பெற்றன. 5 வருடங்கள் உருண்டோடி விட்டது. இன்று அதே அரியலூர் மாவட்டத்தில் மாணவி நிஷாந்தினி, நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்துள்ளார். ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை. நீட்  தேர்வில் இருந்து விலக்கு என்பதைப் பிரதான வாக்குறுதியாக பேசி, திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்து விட்டது. ஆனால், தமிழகத்தில் இன்றும் நீட் தேர்வு காரணமாக தற்கொலைகள் தொடர்கின்றன. நாளை நீர் தேர்வு நடைப்பெற உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு பயந்து அரியலூரில் மாணவி நிஷாந்தினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர், ரயில்வே காலனி தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் நிஷாந்தினி, 12ம் பொதுத் தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். 

இந்நிலையில், நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்திருந்த மாணவி நிஷாந்தினி, இன்று காலை திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிஷாந்தினி

நிஷாந்தினி, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி 220 மதிப்பெண்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருடமும் நீட் தேர்வுக்கு தயார் செய்து கொண்டிந்தார்.

முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு, இதே அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வி பயத்தால், செப்டம்பர் 1ம் தேதி தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

நீட் ராசி

நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொளவது தொடர்கதையாகி வருகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இரண்டாவது நீட் தேர்வு இது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web