எச்.ராஜா மீது விலங்குகள் நல வாரியம் புகார்!! 7 நாட்களில் அறிக்கை தர உத்தரவு!!

 
எச்.ராஜா

தமிழகத்தில் எச்.ராஜா ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக உள்ளார். இவர்  1989 முதல் மிகத் தீவிரமாக  அரசியலில்  செயல்பட்டு வருகிறார். 2001-ல் தமிழ்நாட்டின் காரைக்குடி தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் உதயப்பாவை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினரானார். 2014 முதல் 2020 வரை பாஜகவின் தேசிய செயலாளர்களில் ஒருவராக இருந்தார்.

ஹெச் ராஜா

இவரது பேச்சால் இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்வது வாடிக்கையாகி வருகிறது.  அதன்பிறகு அதை நான் செய்யவில்லை, என் அட்மின் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளவும் முயற்சிப்பார். தற்போது அவர் போட்ட ட்விட்டர் பதிவே அவரை சிக்க வைத்திருக்கிறது.இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி வெளியிட்ட பதிவில், எங்கள் வீட்டில் அல்சேசன் நாய் ஒன்றை பிரியமாக வளர்த்தோம். ஆனால் அதற்கு வெறிபிடித்தது. இதனால் நாய் பிடிப்பவரிடம் சொன்னோம். அவர் மூங்கிலால் அதன் மண்டையில் ஒரே போடு போட்டார். நாய் இறந்துவிட்டது. வருத்தமாக இருக்கிறது. என்ன செய்வது என்று பதிவிட்டிருந்தார்.

இந்துக் கோவில்களை போல் மற்ற மத வழிபாடுகளும் தமிழில் நடத்தப்படுமா? ஹெச். ராஜா காட்டம்!

இந்நிலையில், ஸ்வப்னா சுந்தர் என்பவர் எச்.ராஜாவின் மேற்கண்ட ட்விட்டர் பதிவை ஆதாரமாக கொண்டு அவர் மீது விலங்கு நல வாரியத்தில் புகார் செய்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சொல்லி இந்திய விலங்கு நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.அதில், மிருக வதை தடை சட்டம் 1960 பிரிவு 11 படி, தெருநாய் உட்பட எந்த விலங்கையும் துன்புறுத்துவது குற்றமாகும், இந்திய தண்டனை சட்டம் 429 படி, எந்த விலங்கையும் கொலை செய்தல், விஷம் கொடுத்தல் ஆகிய குற்றங்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி ஏழு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web