மேலும் ஒரு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!! தொடரும் சோகம்!!

 
தற்கொலை

சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மன அழுத்தம் தாளாமல் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இது குறித்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் மிகுந்த கவலை தெரிவித்து வருகின்றனர். மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு  முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதே போல் ஒரு சம்பவம் சென்னை அயனாவரத்தில் நடைபெற்றுள்ளது. 

தற்கொலை

சென்னை அயனாவரம் செட்டி தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் ஜானகி. இவருடைய மகள் 19 வயது செல்வி பி.எஸ்சி கம்ப்யூட்டர் சையின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது தம்பி பாபு. அம்பத்தூரில் தனியார் கம்பெனியில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். மேலும், இவரது அத்தை கற்பகம் மற்றும் கற்பகத்தின் மகன் மணிகண்டன், மகள் பிரியா என அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். 

நேற்று காலை அனைவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில், செல்வி மட்டும் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். இந்த நிலையில், வேலைக்குச் சென்ற அத்தை கற்பகம் வேலை முடிந்து பிற்பகல் 1 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகுநேரம் தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது செல்வி வீட்டில் இருந்த புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், அயனாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அயனாவரம் போலீசார் செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீஸ்

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து போலீசார் செல்வி வீட்டில் சோதனை செய்ததில், கடிதம் ஒன்று சிக்கியது. அதில் தனக்கு வாழ்க்கை வெறுத்து போய்விட்டது என்றும், வாழ பிடிக்கவில்லை என்பதால் தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்து இருப்பது தெரியவந்தது. இதனால், உறவினர்கள் யாராவது செல்வியை திட்டினார்களா அல்லது வேறு ஏதாவது பிரச்னையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web