நாளை பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் வெளியீடு!! மாணவர்களே தயாரா இருங்க!!

 
பொன்முடி

கல்லூரி மாணவிகள்

பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி சிபிஎஸ்இ முடிவுகள் வெளியான பிறகு 5 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகவல் உதவி மையத்தை உயர்கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

கல்லூரி மாணவிகள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  சிபிஎஸ்சிஇ தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்படுகிறது என்றும், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு  நாளை முதல் ஜூலை 8வரை  விண்ணப்பிக்கலாம்   எனவும், இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் காலி பொறியியல் இடங்கள் உள்ளதாக அமைச்சர் பொன்முடி  தெரிவித்தார்.  

இந்த ஆண்டு முதல் பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது எனவும் அமைச்சர்  பொன்முடி தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web