மாணவர்களே தயாரா?! பொதுத்தேர்வு எழுதாதவர்களுக்கு துணைத்தேர்வு தேதிகள் அறிவிப்பு!!

 
தேர்வு

தமிழகத்தில் 2021-2022 கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மேமாதம் தொடங்கப்பட்டன. ஜூன் 1 முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜூன் 17ம் தேதி 12ம் வகுப்பு பொத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும் என பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால் அதன் பிறகு ஜூன் 20ம் தேதி இன்று +2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின அதன்படி இன்று காலை +2  தேர்வு முடிவுகளை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்  வெளியிட்டார். 

 

தமிழகம், புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். +2 தேர்வில் கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகம் எனத் தெரிவித்துள்ளார். வழக்கம் போல் +2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

தேர்வு தாள்கள் திருத்தும் பணி
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் http://tnresults.nic.in, http://dge.tn.gov.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அத்துடன் பள்ளிகள் மூலம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்கள் அனுப்பப்படும். நூலகங்கள் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறியலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

தேர்வு
அதே போல் தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பில் மொத்தம் 90.7 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் .  10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதியுள்ளனர்.  இந்நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு மாணவர்களுக்கான  தேர்வு முடிவுகள் பிற்பகல் 12 மணி முதல் இணையதளம் மூலம்  தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 24 முதல் வழங்கப்படும்.  12ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 27ல் தொடங்கும் . 10ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2ல் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார் 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web