அட்ரா சக்க!! கண்கருவிழி பதிவு முறையில் ரேஷன் பொருட்கள்!!

 
கண்கருவிழி

தமிழகத்தில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் ரேஷன் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படும் குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்ட நடவடிக்கையாக பயோமெட்ரிக் முறை அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்பட்டது. இந்த பயோமெட்ரிக் முறையில் உணவு பொருட்கள் அனைத்தையும் ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகை பதிவு செய்த பிறகு தான் விநியோகம் செய்யப்படுகிறது.  

கண்கருவிழி ரேஷன்

இதன் மூலமாக ரேஷன் பொருட்கள் தகுதியான நபர்களுக்கு சென்று சேருவது உறுதி செய்யப்படுகிறது.அதே நேரத்தில் இந்த முறையால் வயதானவர்களுக்கு சரிவர தங்களின் கைரேகை பதிவு செய்ய முடிவதில்லை. அதனால் ரேஷன் பொருட்களை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதுடன் தேவையற்ற சிக்கல் உருவாகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு வர முடியாததால், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கண்கருவிழி ரேஷன்
ரேஷன் கடைகளில் மின்னணு பதிவேட்டில் கோளாறு ஏற்படுவதால் கண் கருவிழி பதிவு மூலம் ரேசன் அட்டை தாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை  அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி  ஏற்கனவே அறிவித்திருந்தார்.இந்நிலையில் சென்னையில் திருவல்லிக்கேணி ரேஷன் கடைகளில் முதல் முறையாக இன்று கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் விநியோகம் தொடங்கப்பட்டது.  சோதனை முயற்சியாக இந்த திட்டத்தை அமைச்சர் சக்கரபாணி மற்றும் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இன்று தொடக்கி வைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web