நடிகை ரோஜா கார் மீது தாக்குதல்!! ஆந்திராவில் பரபரப்பு!!

 
ரோஜா

தமிழ் திரையுலகின் முன்னாள் முண்ணனி கதாநாயகியான நடிகை ரோஜா தற்போது ஆந்திராவில் அமைச்சர். இவர் பல்வேறு அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டு அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகிறார்.ஆந்திராவில்  நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் இருந்து வருகிறது. தற்போது  ராயலசீமா, கடலோர ஆந்திரா, வட ஆந்திரா மூன்று பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி அளிக்கும் விதமாக மூன்று தலைநகர் அமைக்க வேண்டும்  என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து  நேற்று ஆந்திராவில் நடைபெற்ற விசாகா கர்ஜனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டுவிட்டு விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது ரோஜா. ஜோகி ரமேஷ், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி ஆகியோர் சென்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதல்

ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் விசாகப்பட்டினத்தில் 3 நாள் ஜனவாணி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விசாப்பட்டினம் விமான நிலையத்திற்கு வர இருந்த நிலையில் இந்த மோதல் நடைபெற்றது. பவன் கல்யாணை வரவேற்பதற்காக கூடிய 300க்கும் மேற்பட்ட ஜனசேனா கட்சியினர் திடீரென்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வருவதை அறிந்து அவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவர்கள் வந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.  இருதரப்பு மோதலால் விமான நிலையத்தில் திடீரென்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த மோதல் சம்பவம் குறித்து விசாகப்பட்டினம் காவல் ஆணையர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 300 ஜனசேனா தலைவர்கள் திரண்டு அமைச்சர் ஒய்.எஸ்.ஆர். சி.பி. தலைவர்களை அவதூறாக பேசியதுடன், அவர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. பொது மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தில் இந்த மோதலில், அரசு உடமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதை தடுக்க முற்பட்ட போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் முன்னங்கி திலீப்குமார், சித்து, சாய்கிரண், ஹரீஷ் உள்ளிட்ட சில பொது மக்களும் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல்

உடனடியாக இது குறித்து செய்த போலீசார் ஜனசேனா தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து 25 ஜனசேனா தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் பவன் கல்யாண் தங்கியுள்ள ஓட்டலில் போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்து நிலைமையை சீராக்கி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web