‘அவன் இவன்’ பட நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

 
ராமராஜ்

இயக்குநர் பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படம் மூலமாக பிரபல நடிகராக அடையாளம் காணப்பட்ட நடிகர் ராமராஜ் திடீர் மரணமடைந்தார். தமிழ் திரையுலகிற்கு இது கஷ்ட காலம் போல. அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் திரையுலகைச் சேர்ந்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பிரபல காமெடி நடிகர் ராமராஜ் காலமானார். அவரின் மறைவுக்கு திரை உலகத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் பாலாவின் படமான ‘அவன்  இவன்’ படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் காமெடி நடிகர் ராமராஜன் (வயது 72). இவரின் வசன உச்சரிப்பால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். ராமராஜ் ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் அருகே மேலசாக்குளம் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். சினிமா துறையில் கால் பதிப்பதற்கு முன்னர் இவர் கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திருமணமான இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

ராமராஜ்
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஒரு மாத காலமாக ராமராஜ் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். குடும்பத்தினர் இவரை உடன் இருந்து கவனித்து வந்தனர். துரதிருஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். இதைத் தொடர்ந்து திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் நடிகர் ராமராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராமராஜ்

மறைவுக்கு பின்னர் நடிகர் ராமராஜின் உடல் ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூரில் உள்ள அவரத சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நடிகர் ராமராஜின் வீட்டு முன்பு மக்கள் அஞ்சலி செலுத்து கூடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web