விபரீதமான விளையாட்டு!! ஆன்லைன் ரம்மியால் நகை, பணத்தை இழந்து இளம்பெண் தற்கொலை!!

 
ஆன்லைன் ரம்மி

கொரோனா காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த மக்கள் ஆன்லைன் விளையாட்டுக்களை தீவிரமாக  விளையாடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அதிலும் சமீபகாலமாக தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் அறங்கேறி வருகிறது. இந்த ஆன்லைன் ரம்மியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், சென்னை மணலி புதுநகர் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்தவர் பவானி (29). இவர் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் (32) என்பவரைக் காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மெக்காட்டிக்பேரஸ் (3), நோயல்கிறிஸ் (1) என 2 குழந்தைகள் உள்ளனர்.

 ரம்மி

கந்தன்சாவடியில் உள்ள தனியார் ஹெல்த் கேர் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த பவானி,  கடந்த ஓராண்டாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான பவானி பல லட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இந்த சம்பவம் கணவர் மற்றும் பவானி குடும்பத்தினருக்கு தெரியவர அவர்கள் பவானியைக் கண்டித்துள்ளனர்.

ஆனால், பவானி அவர்களது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது 20 சவரன் நகையை விற்று அதில் வந்த பணத்தை வைத்து ஆன்லைன் ரம்மி சூதாட்டம் ஆடியுள்ளார். இதில் பணத்தை இழந்த பவானி விட்டதைப் பிடிக்க எண்ணி தனது இரு தங்கைகளிடம் தலா 1.5 லட்சம் வீதம் 3 லட்ச ரூபாய் கடன் வாங்கி ரம்மி விளையாட்டில் தோற்றுள்ளார். 

 ஆன்லைன் ரம்மி

இதனால் மன உளைச்சல் அடைந்த பவானி என்ன செய்வது என்று தெரியாமல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது தங்கை பாரதியிடம் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்ததை தெரிவித்துள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு குளித்து விட்டு வருவதாக சென்ற பவானி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பாக்கியராஜ் குளியல் அறை கதவைத் திறந்து பார்த்த போது பவானி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே பவானியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பவானி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

பின்னர் தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், பவானி சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web