BIG BREAKING!! தமிழகம் முழுவதும் 1,00,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்!! மிஸ் பண்ணீடாதீங்க!!

 
தடுப்பூசி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 20ம் தேதி 40 என்ற எண்ணிக்கையில் இருந்த தினசரி பாதிப்பு தற்போது 1000க்கும் அதிகமாகி வருகிறது.இதனை கட்டுப்படுத்த மீண்டும் தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அத்துடன் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை அதிகப்படுத்தவும்  மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தடுப்பூசி

அதன்படி பொது இடங்கள், கூட்டம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி, முகக்கவசம் இவைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று சென்னையில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக 4 மணி நேரத்தில் 50 ஆயிரம் முகக்கவசம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் பிரச்சாரம் நிகழ்ச்சியை சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்ரமணியன் மற்றும் மாநகராட்சி மேயர் துணை உள்ளிட்டோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில்  வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மாநகர பேருந்தில் பயணித்தோர் உட்பட அனைவருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்  முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தடுப்பூசி

 தமிழ்நாடு முழுவதும் 8970 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று ஐம்பதாயிரம் முகக்கவசம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது  என்றும் தெரிவித்தார்.  ஜூலை  10ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என கூறியவர், ஒரே நாளில் ஒரு லட்சம் இடங்களில் முகாம் நடத்தப்படும் என்றும், காசநோய் இல்லா தமிழகம்  என்ற நிலையை எட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம் என்றும்,  நாளை மறுநாள்  23 நடமாடும் "எக்ஸ்ரே" வாகன சேவையை நொச்சிக்குப்பம் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார். .

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web