BIG NEWS!! ஜேஇஇ தேர்வுத் தேதி மாற்றம்!! ஹால்டிக்கெட் வெளியீடு!!

 
JEE NEET Entrance Exam

இந்தியா முழுவதும் ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி, நிறுவனங்களில்  உயர்கல்வி பயிலவும், பி.இ., பி.டெக், பி.பிளான், பி.ஆர்க். உட்பட என்ஜினீயரிங் படிப்பில் தகுதியான மாணவ-மாணவிகளை சேர்க்கவும் ஜேஇஇ நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகள் இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.

ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

அந்த வகையில்  நடப்பு கல்வி ஆண்டுக்கான ஜே.இ.இ. முதன்மை நுழைவுத் தேர்வுகள் ‌ஜூன் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள்  பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.  இதற்கான  2ம் கட்ட நுழைவுத்தேர்வு ஜூலை  21 முதல் 31ம்  தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஜூலை  25ம் தேதி தொடங்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மாணவி முடிவுகள் பரீட்சை

இதில் சேலம், நாமக்கல் மாணவ- மாணவிகள் உட்பட 6.3 லட்சம் பேர் கலந்து கொள்ள  உள்ளனர். வெளிநாடுகளில் உள்ள 17 இடங்கள் உட்பட இந்தியா முழுவதும் 500 நகரங்களில் உள்ள பல்வேறு மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான  ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவ- மாணவிகள் தங்களுடைய விண்ணப்ப எண், பிறந்த தேதி அல்லது கடவுச்சொல் கொடுத்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web