BIG NEWS!! டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் மாற்றம்!! மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க!!

 
டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில் அரசுப்பணிகளை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில்  கிராம நிர்வாக அலுவலர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர் உட்பட  7,382 காலிப் பணியிடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 17 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இவர்களுக்கான ஹால்டிக்கெட் கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைனில்  வெளியிடப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி

TNPSC Group 4 தேர்வுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில்  அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.  இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி சமீபத்தில் பெரும் கலவரம் வெடித்தது. வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன. 
குரூப்-4 தேர்வுக்கு அந்த பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த பள்ளியில் தேர்வு மையம் அமைப்பதற்கான சூழல்  இல்லை. இதனால் அங்கு அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை டிஎன்பிஎஸ்சி மாற்றி அமைத்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி

இதுகுறித்து  TNPSC வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ள சக்தி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு அங்கு தேர்வுகள் நடத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால்  விண்ணப்பதாரர்கள்  கள்ளக்குறிச்சி நீலமங்களம் ஏ.கே.டி அகாடெமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏ.கே.டி. மெமோரியல் வித்யா சாகெத் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவர்களுக்கான மாற்று ஹால் டிக்கெட்களை  www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ மொபைல் எண் மூலம் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web