BIG NEWS!! மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு!! உயர்மட்டக்குழு அமைக்க அரசாணை வெளியீடு!!

 
மாற்றுத் திறனாளிகள்

தமிழக சட்டப்பேரவையில்  முதல்வர் அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க ஏதுவாக உகந்த பணியிடங்களை கண்டறிய  உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் நடைமுறையில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும், வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்யும் வகையில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைத்திட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள்


இக்குழுவில்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர்கள், மனிதவள மேலாண்மை துறை செயலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அனைவரும்  இடம் பெற்றுள்னர்.அனைத்து அரசு துறைகள்,அரசு சார்பு நிறுவனங்கள்,பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திலும்  வழங்கப்படும் வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு அளிக்கப்படுவதை கண்காணிக்கும்.

மாற்று திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு நிரப்பப்படாத பட்சத்தில், அப்பணியிடங்கள் அடுத்த ஆண்டிற்கு முறையாக முன்கொணரப்படுகின்றனவா (carried forward) என்பதனை கண்காணிக்கும்.மாற்றுத்திறனாளிகள் பணிபுரிய உகந்த பதவியிடங்கள் கண்டறியப்படுவதையும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்படும்  எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web