BIG NEWS!! 4 நாளில் 75 கிமீ சாலை !! கின்னஸ் சாதனை படைத்த NHAI!!

 
நிதின் கட்காரி

இந்தியாவில் நாளுக்கு நாள் சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து சாலைகளை மேம்படுத்தவும், புதிய தொழில்நுப்டங்களை புகுத்தவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவில்  NH-53 நெடுஞ்சாலையில் ஐந்து நாட்களுக்குள் ஒரே பாதையில் 75 கிமீ நீளமுள்ள தொடர்ச்சியான சாலையை அமைத்துள்ளது. இந்த சாதனை  கின்னஸ் புத்தகத்தில் உலக சாதனையாக இடம் பிடித்துள்ளது. 



இதன்படி மகாராஷ்டிராவின் அமராவதிக்கும் அகோலாவுக்கும் இடையிலான 75 கிமீ நீளமுள்ள சாலையை 105 மணி 33 நிமிடங்களில் உருவாக்கி இந்திய தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் NHAI கின்னஸ் சாதனை படைத்துள்ளது.அமராவதி-அகோலா நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணி சனிக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கியது.  இந்த நெடுஞ்சாலை கொல்கத்தா, ராய்பூர், நாக்பூர், அகோலா, துலே மற்றும் சூரத் ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 


இந்த தகவலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் புதிதாக போடப்பட்ட  நெடுஞ்சாலையின் படத்தையும்,கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழையும் இணைத்துள்ளார். 2019 , பிப்ரவரி 27ம் தேதி பொதுப்பணித்துறை ஆணையம் – ASHGHAL (கத்தார்) கின்னஸ் சாதனையை செய்திருந்தது.அதனை முறியடிக்கும் வகையில் தற்போது இந்திய நெடுஞ்சாலை ஆணையம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web