BIG NEWS!! போதைப்பொருள் விளம்பரங்களுக்கு தடை!! மத்திய அரசு அதிரடி!!

 
தடை

இந்தியாவில் போதை மற்றும் புகையிலை  பொருட்களை தொடர்ந்து உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் அதனால் உருவாகும் பெருநோய்களும் தலைவிரித்தாடுகின்றன இதனையடுத்து புகையிலை மற்றும் பான் இவைகளை தடை விதிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக முதலில்  தடை செய்யப்பட்ட பிராண்டை நினைவுபடுத்தும் வகையில் சோடா, பான் மசாலா போன்ற பொருட்களுக்கான விளம்பரங்கள் ஊடகங்களில் வலம் வருவதை தடை செய்ய உத்தேசித்துள்ளது. 

பான்மசாலா

இந் நிலையில், மக்களை திசை திரும்பும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், “ஆதாரம் இல்லாத உரிமை கோரல்கள், மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளை அளித்தல், தவறான தகவல்களை அளித்தல் போன்றவற்றால் நுகர்வோர் ஏமாற்றப்படாமல் இருப்பதை இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உறுதி செய்கின்றன.  சரியான தகவல் பெறும் உரிமை தெரிவு செய்யும் உரிமை, பாதுகாப்பற்ற பொருட்களுக்கு எதிராக பாதுகாத்து கொள்ளும் உரிமை, சேவைகளுக்கான உரிமை என பல்வேறு உரிமைகளை  மீறுவதாக இத்தகைய விளம்பரங்கள் இருக்கின்றன.

பான்மசாலா

வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோருக்கான தண்டனையும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள், விளம்பரம் செய்வோர் தவறாக வழிகாட்டும் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிப்போர் ஆகியோருக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். தொடர்ந்து தவறு செய்வோருக்கு ரூ.50 லட்சம் வரையும் அபராதம் விதிக்கப்படலாம். தவறாக வழிகாட்டும் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நிறுவனம் இத்தகைய விளம்பர தயாரிப்புக்கும், ஒப்புதல் அளிப்பதற்கும் முதலில் ஓராண்டு வரையும் தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் 3 ஆண்டு வரையும் ஆணையத்தால் தடை விதிக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web