BIG NEWS!! அனைத்து பள்ளிகளிலும் போதைப்பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு!! அதிரடி அறிவிப்பு!!

 
போதைப்பொருள்

தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க போதைப்பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட உள்ளது. இதனை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  இதன் மூலம் மாணவர்களின் எதிர்காலம் காக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போதை பொருள் வைத்திருப்பவர்களை சிறையில் அடைக்கக் கூடாது! அதிரடி அறிவிப்பு!
இது குறித்து செய்தியாளர்களிடம் அரவிந்தன் மேலும் கூறுகையில், ‘‘தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் போதைப் பொருள்களை பயன்படுத்தவதை தடுக்க போதைப்பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படும். அதன்படி, பள்ளி ஆசிரியர், மாணவர், பெற்றோரை அடங்கிய கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்படும். அதைத்தொடர்ந்து கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இதற்கு முன்னர் மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாக இருந்தார்களா? அல்லது இருக்கிறார்களா? அதற்கான அறிகுறிகள் அவர்களிடம் தென்படுகிறா? என்பது பற்றி கண்டறியும் முயற்சிகளையும் போதைப்பொருள் தடுப்பு கண்காணிப்புகுழு முன்னெடுக்கும்.

போதை மாத்திரை

அப்படி மாணவர்கள் ஏதேனும் அடையாளம் காணும் பட்சத்தில் அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு அவர்களின் மனநிலை குறித்து ஆராயப்படும். மேலும் மாணவர்களுக்கு போதைப் பொருள்களை சப்ளை செய்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.தமிழக பள்ளிகளில் மாணவர்களின் நலன் குறித்து அமைக்கப்பட உள்ள கண்காணிப்பு குழுவால் நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web