BIG NEWS!! தெருப்பெயர்களில் ஜாதியை நீக்குங்க!! முதல்வர் அதிரடி உத்தரவு!!

 
அப்பாவு தெரு

தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையை சிங்கார சென்னையாக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது  .  சென்னையை பொறுத்தவரை மொத்தமாக 10000க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.  இந்த தெருக்களின் பெயர் பலகைகளை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில்  8.43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.

ரூ.1,100 கோடி  நிதி உதவி !  நம்ம சென்னை!

தெருப் பெயர்களை பொறுத்தவரை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் இலச்சினை, தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீட்டு எண் என அனைத்து தகவல்களும் இந்த பெயர் பலகைகளில் இடம் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியையும் முடுக்கி விட்டுள்ளதாக  சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

ப்ரியா சென்னை மாநகராட்சி பட்ஜெட்

அதன்படி சென்னை  171வது  வார்டில் உள்ள சாலையின் பெயர்  அப்பாவோ கிராமணி 2வது தெரு எனப் பெயரிடப்பட்டிருந்தது.  இந்த பெயரை மாற்றக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்  ஏப்ரல் 6ம் தேதி, மாநகராட்சி உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தற்போது இந்த பெயரை மாற்றி சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி தற்போது இந்த தெருவின் பெயர் அப்பாவு (கி) தெரு என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த செயல்பாடுகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web