BIG NEWS!! தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் கிடையாது!! மக்கள் உற்சாகம்!!

 
உற்சாகம்

தமிழகத்தில் கொரோனா 3 வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இயல்பு நிலை திரும்பியிருந்தது. அதன் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 125 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1000ஐ கடந்துள்ளது .அதன்படி 1,063 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உற்சாகம்

இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். குறிப்பாக மீண்டும் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இது குறித்து  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் கொரோனாவால் உயிர் பாதிப்பு குறைவாகவே உள்ளது; பிஏ 4, பிஏ 5 உயிர்கொல்லியாக இல்லாமல் வேகமாக பரவும் தன்மை கொண்டது. மக்கள் எச்சரிக்கையாக இருந்தாலே போதும்.

மா.சுப்பிரமணியன்

குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும்போது கொரோனா அறிகுறி இருக்கிறதா? என கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் .பொதுமக்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும்.தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட 92 சதவீதம் பேர் வீடுகளிலேயே தங்களை  தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.18 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும் தமிழகத்தில் .கொரோனா அதிகரித்தாலும்  தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை. எனத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web