BIG NEWS!! FIR இருந்தாலும் பாஸ்போர்ட் பெற தடை இல்லை!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

 
பாஸ்போர்ட்

 

பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பம் செய்யும் நபர் மீது ஏதேனும் ஒரு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு இருந்தாலும் அவர் எந்தவித தடையும் இல்லாமல் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பாஸ்போர்ட் வெச்சிருக்கீங்களா? உடனே இதை செய்துடுங்க!
சென்னை உயர்நீதிமன்றத்தில், திருச்சியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் தொடர்ந்த வழக்கில்தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஷேக் அப்துல்லா தனது வழக்கில், ‘‘மலேசியாவில் தான் தொழில் புரிந்து வந்தபோது, எதிர்பாராத விதமாக பாஸ்போர்ட் தொலைந்துள்ளது. மீண்டும் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று மலேசியாவில் உள்ள இந்திய தூதகரத்தில் ஷேக் அப்துல்லா விண்ணப்பித்துள்ளார். ஆனால் அப்துல்லா கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டு திருச்சியில் இருந்த போது சில குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதாக கூறி இந்திய தூதரகம் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்துள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷேக் அப்துல்லா வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி கூறும்போது, ‘‘ஒருவர் மீது குற்றவழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இருந்தாலும் கூட எந்த தடையும் இல்லாமல் பாஸ்போர்ட் வழங்கலாம்.

court order

ஆனால் அதே சமயம் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தால் மட்டுமே நீதிமன்றத்தின் உத்தரவை நாட வேண்டும் என்று கூறினார்.இந்த தீர்ப்பின்படி இனி முதல் தகவல் அறிக்கையின் உண்மைத்தன்மையை அறிந்து பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்தவர்களுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web