பாஜக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு! காவல்துறை அதிரடி!

 
தமிழக அரசுக்கு எதிராக போராடும் பா.ஜ.க அண்ணாமலை..!!

பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 21-த் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான காலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8.22-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 6.70-க்கும் குறைந்து விற்பனையாகி வருகிறது. குறிப்பாக கடந்த முறை (நவம்பர்) வரியைக் குறைக்காத மாநிலங்கள் வரிகுறைப்பு செய்ய வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, ‘பெட்ரோல், டீசல் மீதான வரிகளை பலமுறை உயர்த்தியபோது, ​​ஒன்றிய அரசு ஒருபோதும் எந்த மாநிலங்களிடமும் கலந்தாலோசிக்கவில்லை. இந்த நிலையில் மாநிலங்கள் தங்கள் வரியைக் குறைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லை’ என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டார்.

தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை இந்த அரசு செய்ய வேண்டும். 72 மணி நேரத்தில் சொன்னதைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஸ்டாலின், கருணாநிதியை விட ஆபத்தானவர் என H ராஜா கூறியதன்  காரணத்தை கூறிய பாஜக தலைவர் அண்ணாமலை.

அதன்படி, நேற்று ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி துவங்கி தலைமை செயலகத்தை நோக்கி பாஜக சார்பாக பேரணி நடந்த்து. அப்போது, பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது பேசிய அண்ணாமலை, கோட்டையை நோக்கி நாம் வரப்போகிறோம் என்று தெரிந்ததும் தான் முதல்வர் டெல்டாவை நோக்கி சென்றுவிட்டார். கச்சத்தீவை எப்படி மீட்பது என பிரதமர் மோடிக்கு தெரியும் என்றும், கணவில் கூட திமுகவால் மீட்க முடியாது  என்று பேசினார்.

வேளாண் சட்டங்களுக்கு ஒரு காலம் வரும்: அண்ணாமலை

இந்நப் போராட்டத்தில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, மாநில செயலர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், சட்ட விரோதமாக கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறி செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 5 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web