பாஜக செயற்குழு உறுப்பினர் அதிரடி கைது! மதக்கலவரத்தை தூண்டியதாக வழக்கு!

 
பாஜக சவுதாமணி

மதக்கலவரத்தைத் தூண்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டதில், பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது செய்யப்பட்டார். சமூக வலைத்தள பக்கத்தில் மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் இவர் தொடர்ந்து பதிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. 

தமிழக பாஜகவின் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் சவுதாமணி, அவரது ட்விட்டர் பக்கத்தில்  மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். 

sowthamani

மதக்கலவரத்தை தூண்டும் வீடியோவை பகிர்ந்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து, அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரை தொடர்ந்து  சவுதாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். எனினும் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சவுதாமணி

இந்நிலையில், சென்னை  சூளைமேட்டில் உள்ள சவுதாமணி  வீட்டில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சவுதாமணியை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web