BREAKING!! இலங்கை அதிபராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு!! சிக்கல்களை தீர்ப்பாரா புதிய அதிபர்?!!

 
தினேஷ் குணவர்தன


இலங்கையின் புதிய பிரதமராக பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு இலங்கை மற்றும் சர்வதேசத் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு எழுந்து வரும் தொடர் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் சமாளிக்க முடியாத ராஜபக்சே சகோதரர்கள் அதிபர் மற்றும் பிரதமர் பதவியை ராஜினமா செய்து தலைமறைவானார்கள். இதைத்தொடர்ந்து நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காகவும், பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கை
அதைத்தொடர்ந்து இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். ஏற்கனவே தினேஷ் குணவர்த்தன பிரதமராவார் என்று நேற்று தகவல்கள் வெளியாகின. இதனால் இலங்கை அரசியல் களத்தில் நேற்று முதல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் இன்று தினேஷ் குணவர்தன புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கை

அவருக்கு அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சர்வதேச தலைவர்கள் இலங்கை பிரதமராக பதவியேற்றுக் கொண்ட தினேஷ் குணவர்த்தனவுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர். தற்போதைய புதிய பிரதமர் இலங்கையின் பொருளாதார நெருக்கடி, மக்களின் தொடர் போராட்டம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம், விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க வேண்டி இருக்கிறது. தினேஷ் குணவர்தனவின் பிரதமர் பதவி ஒரு முள் நாற்காலி என்றே சொல்ல வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web