BREAKING!! ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கம்!! தொடரும் இபிஎஸ் அட்ராசிட்டி!!

 
ஓபிஎஸ் இபிஎஸ்

அதிமுகவில் கடந்த சில வாரங்களாக ஒற்றை தலைமை பிரச்சனையால் உட்கட்சி பூசல்  அதிகரித்து வருகிறது. பரபரப்பான சர்ச்சையான சூழ்நிலையில் இன்று  பொதுக்குழு கூட்டம் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வந்தனர். 

அதிமுக
அதிமுக கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்படும் தீர்மானத்தை இபிஎஸ் கொண்டு வரக்கூடும் என் ஏற்கனவே கே.பி.முனுசாமி தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் விடுத்த செய்திக்குறிப்பில் ”பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று ஓபிஎஸ், மனோஜ், வைத்திலிங்கம் ஆகியோரை நீக்க தீர்மானம் கொண்டு வரப்படும். குறிப்பாக,ஓபிஎஸை  கட்சியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை பொதுச்செயலாளர் இபிஎஸ் கொண்டு வருவார்”,என தெரிவித்திருந்தார்.

அதிமுக
இந்நிலையில்,கட்சியின் அடிப்படை உறுப்பினர், பொருளாளர் உட்பட  அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதாக பொதுக்குழு தற்போது பொதுக்குழு அறிவித்துள்ளது. அதிமுகவின் கோட்பாடுகள் மற்றும் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ்  மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெசிடி பிரபாகர் அனைவரும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் மூலம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும்,சலசலப்பையும்  ஏற்படுத்தியுள்ளது. இனி அடுத்து என்ன நடக்குமோ என தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web