BREAKING!! தி.நகரில் சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்!! வருமானவரித்துறை அதிரடி!!

 
சசிகலா

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இவருக்கு சொந்தமான பல இடங்களில்  2017ல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அவர்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 5 வருடமாக பினாமி சொத்துக்கள் தொடர்பாக ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வந்தன.

மருத்துவ நிறுவன குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை: ரூ.142 கோடி ரொக்கப் பணம் பறிமுதல்

அதன் பின்னர் தற்போது  பினாமி சொத்துக்களை முடக்கும் பணியில், வருமானவரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.ஏற்கனவே  2019ல் முதல்கட்டமாக  ரூ.1600 கோடி சொத்துக்களும்,  அடுத்தபடியாக ரூ.300 கோடி சொத்துக்களும் முடக்கப்பட்டன.  கடைசியாக ரூ.2,000 கோடி மதிப்பிலான அவரது பங்களாவும் முடக்கப்பட்டது. இதுவரை மொத்தமாக  ரூ.4,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

சசிகலா ஒபிஎஸ், இபிஎஸ்

இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் பெயரில் வாங்கிய ரூ.15 கோடி சொத்துக்கள் பினாமி சொத்து என உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பினாமி சொத்துக்களை முடக்கும் பணிகளில் தற்போது தி.நகர் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web