BREAKING!! சூப்பர்!! 15 மாவட்டங்களில் காலைச்சிற்றுண்டி தொடக்கம்!!

 
சிற்றுண்டி

தமிழகத்தில் 2022-23ம் ஆண்டுக்கான கல்வியாண்டு தொடங்கப்பட்டு நேரடி வகுப்புக்கள் நடத்தபட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டில் தொடக்கம் முதலே மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளி செல்லத் தொடங்கியுள்ளனர். தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவச சீருடை , புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

சிற்றுண்டி
கற்றலில் குறைபாட்டை நீக்கி மாணவர்களிடையே நல்லொழுக்கத்தை போதித்து பாடங்கள் எடுக்கும் படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புக்களும் நடத்தப்பட்டன. மாணவர்களுக்கு கற்றலில் இனிமையை கொண்டு வரவும், அதனை மேம்பாடு அடையச் செய்யவும் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசும், பள்ளிக் கல்வித்துறையும் மேற்கொண்டு வருகிறது.

சிற்றுண்டி

அந்த வகையில்  1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சுய உதவி குழுக்கள் மூலமாக சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் தொடங்க ஏற்பாடுகள் மும்மூரமாக நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக  இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web