BREAKING!! மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! கலெக்டர்களுக்கு சுகாதாரத் துறை செயலர் எச்சரிக்கை!!

 
ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா 3 வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக வீடுகளுக்குள் அடைந்து கிடந்த மக்கள் தற்போது சுதந்திரக் காற்றை சுவாசித்து கோடை விடுமுறையை உற்சாகத்துடன் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அதே நேரத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முகக்கவசம், சமூக இடைவெளி, சானிடைசர் உத்தரவுகள் அனைத்தும் காற்றோடு பறக்க ஆரம்பித்து பல காலம் ஆகிவிட்டது.

கொரோனா
இந்நிலையில் தமிழகத்தில் நகரங்களில் மீண்டும் கொரோனா பரவல் ஆரம்பித்து விட்டதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாகவும், அங்கு  நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். 


அந்த கடிதத்தில்  சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் சமூக இடைவெளி, முகக்கவசங்களை கடைப்பிடிக்க மக்களை அறிவுறுத்த வேண்டும். பொதுமக்கள்  அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதை மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 
மேலும் ஜூனில் கொரோனா 4 வது அலை பரவல் இருக்கலாம் என கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும் . அவர்களுக்கான விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகங்கள் ஏற்படுத்த வேண்டும்.

கொரோனா

இனி வரும்  அடுத்த சில வாரங்கள் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் .  ஏப்ரல் 15ல் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  22ஆக இருந்த நிலையில்  தற்போது 100ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி வருவது கவலை அளிக்கிறது. மக்கள் அனைவரும் சுற்றுலாக்கள் சென்று திரும்பி கொண்டிருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதன் அடிப்படையில் மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web