BREAKING!! சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் ரெய்டு!! பரபரக்கும் தலைநகர்!!

 
ரெய்டு

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி  அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக  ஆட்சி புரிந்து வருகிறார்.  அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக சத்யேந்திர ஜெயின் பதவி வகித்து வரும்  நிலையில், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. ஹவாலா பரிமாற்றம் குறித்த   வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

அதிர்ச்சி! ஓபிஎஸ் வீட்டிற்கு அருகிலும் ரெய்டு!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி தொடர்பாக சத்யேந்திர ஜெயின் குடும்பத்தினர் மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்களில் ரூ.4.51 கோடியை அமலாக்கத்துறை சமீபத்தில் முடக்கியது. பரிவர்த்தனை மோசடி தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 


மேலும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை ஜூன் 9ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web