BREAKING!! தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் நிறுத்தம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

 
மழலையர் வகுப்புக்கள்


தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் பள்ளிகளில் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தன. பிப்ரவரி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. திட்டமிட்ட படி அடுத்த கல்வியாண்டு ஜூன் 13ம் தேதி தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

மழலையர் பள்ளிகள்
இந்நிலையில் வரும்  கல்வியாண்டில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அதிரடி அறிவிப்பு ஒன்றை  பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி  தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில்  மொத்தமாக உள்ள 2381 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில்  கடந்த 2018 ம் ஆண்டில்  எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தபட்டன

.1 முதல் 8 ம் வகுப்பு வரை அக்டோபரில் பள்ளிகள் திறப்பு?!
அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும், இந்தப் பள்ளிகளுக்கு பதிலாக அங்கன்வாடி மையங்களிலேயே மழலையர் வகுப்புகள்  நடத்தப்படும். இவற்றின் செயல்பாடுகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் எனவும்  பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web