BREAKING!! அதிர்ச்சி!! பானிபூரி சாப்பிட்ட 97 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!!

 
குழந்தைகள்

மத்திய பிரதேசம் மாநிலம் மண்டலா மாவட்டத்தில் சிங்கர்பூர் பகுதியில் பழங்குடியினர் அதிகம் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நேற்று (மே 28) நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவு கடைகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவில், சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

பானிபூரி

இந்த நிலையில், அங்கிருந்த ஒரு கடையில் பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகளுக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து மருத்துவர் ஷக்யா கூறும்போது, “உடல்

பானிபூரிநலக்குறைவு ஏற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை” என்று கூறினார். 

இந்த சம்பவம் தொடர்பாக பானி பூரி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்தக் கடையில் பானி பூரி செய்யப் பயன்படுத்திய பொருள்கள், பானி பூரியை பறிமுதல் செய்து பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

தகவல் அறிந்த ஒன்றிய அமைச்சரும், மண்டலா தொகுதி எம்பியுமான ஃபாகன் சிங் குலாஸ்தே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web